வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!
கடந்த சில ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருந்தாலும் பெரிதாக எந்த வெற்றியும் பெறாமல் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேலும் அந்நாட்டு வீரர்களுக்கும் அந்த அணி நிர்வாகத்துக்கும் இடையே சம்பள பிரச்சனையும் நிலவி வருகிறது. இதனால் பல வீரர்கள் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேசிய அணி பல தொடர்களை வரிசையாக தோற்று வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரைக் கூட காண அந்நாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி கொஞ்ச கொஞ்சமாக வெற்றிப் பாதைக்குத் திரும்பி வருகிறது.
இந்நிலையில் தற்போது அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டனும் இரண்டு முறை டி 20 உலகக் கோப்பையில் வென்றவருமான டேரன் சமி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளார்.