Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

Written By vinoth
Updated: சனி, 9 நவம்பர் 2024 (15:07 IST)
42 வயதாகும் தோனி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதுதான் அவரின் கடைசி ஐபிஎல் என எதிர்பார்ப்பு எழுந்து, ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சி எஸ் கே அணியால் அவர் அன்கேப்ட் ப்ளேயராக 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தோனி அடுத்த ஆண்டு மட்டும் விளையாடுவாரா அல்லது தொடர்ந்து சில ஆண்டுகள் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காஸி விஸ்வநாதன் “தோனி விரும்புவரை அவருக்காக சி எஸ் கே அணிக் கதவுகள் திறந்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தற்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களில் தோனிதான் அதிக வயதான வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments