1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 மார்ச் 2025 (17:22 IST)

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த ஆண்டாவது அந்த அணிக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆர் சி பி யின் ஹோம் மைதானமான சின்னசாமி மைதானப் பராமரிப்புக்கு இந்த ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் பயன்படுத்தப் பட உள்ளதாக பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிவித்துள்ளது. கோடைக் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.