ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளைத் தவறவிடும் கே எல் ராகுல்… காரணம் என்ன?
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு இறுடியில் நடைபெற்றது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் லக்னோ அணியிலிருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டார். இது அதிர்ச்சியான ஒன்றாக பார்க்கப்பட்டது. கடந்த 3 சீசன்களாக லக்னோ அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அதனால் அவரை அந்த அணியின் கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்ஸர் படேல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் கே எல் ராகுல் ஆரம்ப போட்டிகள் சிலவற்றை இழக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவரது மனைவி அதியா ஷெட்டிக்கு இம்மாத இறுதியில் மகப்பேறு நடக்கவுள்ளதாகவும், அதற்காக அவர் அவரோடு நேரம் செலவிட முடிவு செய்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.