மீண்டும் வேலையைக் காட்டும் ஹாரி ப்ரூக்… ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுமா?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான பந்துகளை எதிர்கொண்டு 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தவர். அதிரடியாக விளையாடிய அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் ஐதராபாத் அணியால் 13.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆனால் அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதனால் சமூகவலைதளங்களில் அவர் இந்திய ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார். அதையடுத்து இந்த சீசனில் அவர் ஐதராபாத் அணியால் கழட்டிவிடப்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 4 கோடி ரூபாய் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆனால் அவர் சொந்த பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த ஆண்டும் அவர் அதே போன்ற ஒரு முடிவை எடுக்க வுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கிலாந்து அணிக்காக போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் நழுவினால் அந்த வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என புதிய விதி பிசிசிஐயால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹார் ப்ரூக் இந்த சீசனில் விளையாடவில்லை என்றால் அவருக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.