வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (09:40 IST)

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

IND vs BAN

சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேசம் - இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

 

 

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

 

தற்போது டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னையில் மழை மேகம் சூழ்ந்துள்ள நிலையில் சூழ்நிலை பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வங்கதேசம் கணித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் களம் இறங்குகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூர விபத்திலிருந்து மீண்ட ரிஷப் பண்ட் சரியாக 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

 

இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரிட் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

 

வங்கதேச அணி: ஷத்மன் இஸ்லாம், ஸாகீர் ஹசன், நஜ்முல் ஹுசைன் சாண்டோ, முஸ்பிகுர் ரஹீம், ஷகீப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, ஹசன் மஸ்முத், ரஹித் ரானா

 

Edit by Prasanth.K