1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2025 (08:20 IST)

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

இந்திய அணிக்குக் கடந்த ஆண்டு வெற்றி தோல்வி என இரண்டும் கலந்தததாக இருந்தது. ஆண்டின் முதல் பாதியில் டி 20 உலகக் கோப்பையை வென்றனர். ஆனால் அதன் பின்னர் வரிசையாக டெஸ்ட் தொடர்களை இழந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியினரை ஊக்குவிக்கும் விதமாக பிசிசிஐ கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு விலையுயர்ந்த வைர மோதிரத்தைப் பரிசாக அளித்துள்ளது.

தொடர்ந்து தோல்வியடைந்து வரும் இந்திய அணிக்கு உற்சாகமளிக்கும் விதமாக இந்த ஏற்பாட்டை பிசிசிஐ செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.