வீரர்களின் அதிருப்தியைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த பிசிசிஐ முடிவு…!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ, வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றுதான் வெளிநாட்டு தொடர்களின் போது குடும்பத்தினர் வீரர்களுடன் தங்குவது சம்மந்தமான கட்டுப்பாடு. குடும்பத்தினர் வீரர்களோடு இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க முடியும் என்று கட்டுப்பாட்டை விதித்தது.
இதற்கு வீரர்கள் வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டாலும் கோலி உள்ளிட்டவர்கள் அதிருப்தியை வெளியிட்டனர் . இதற்கிடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரையும் இந்தியா வென்றதால் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையொட்டி நீண்ட வெளிநாட்டுத் தொடர்களின் போது குடும்பத்தினர் வீரர்களோடு தங்க முன்கூட்டியே விண்ணப்பித்து தங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.