கடைசி கட்டத்தில் அதிரடியில் புகுந்த பங்களாதேஷ்… இந்திய அணிக்கு நிர்ணயித்த இலக்கு!
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.
இதையடுத்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி முதலில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 69 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் அடுத்த விக்கெட்டுக்கு மகமதுல்லா மற்றும் மெஹந்தி ஹசன் ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
மகதுமுல்லா 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காத மெஹந்தி ஹசன் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் பங்களாதேஷ் அணி 271 ரன்கள் சேர்த்துள்ளது. கடைசி 2 விக்கெட்களுக்கு பங்களாதேஷ் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியுள்ளது.