வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (19:55 IST)

தோனிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த பிரபல கிரிக்கெட் வீரர்

சர்வதேச போட்டிகளிலிருந்து யுவராஜ் சிங்கை தொடர்ந்து தோனியும் ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்ராத் தோனி குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். உலக கோப்பை ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20ல் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாய் இருந்தவர் தோனி. தற்போது பாகிஸ்தானுடன் விளையாடிய ஆட்டத்தில் ஒரு ரன்னில் விக்கெட் இழந்து அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்று பயணம் வந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மெக்ராத் டோனியின் பதவி விலகல் குறித்து “தோனி ஓய்வு பெறுவது தொடர்பாக எங்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தோனி ஓய்வு பெற விரும்பும் வரை அவர் விளையாட வேண்டும். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.