1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (18:11 IST)

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

australia - news zeland
நியூசிலாந்துக்கு எதிரான  3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா  2-0 என்ற கணக்கில்  வென்று   தொடரை கைப்பற்றியது.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
 
தற்போது டி-20 தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. 
 
இதையடுத்து இன்று இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டி-20 போட்டி நடைபெற்றது.
இதில்,  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வுசெய்தது.
 
எனவே ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
 
ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.இவ்வணியின் டிராவிட் அதிகப்டட்சமாக 45 ரன்கள் எடுத்தார். 

நியூசிலாந்து சார்பில் லாகி பெர்க்கியூசன் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆடம் மில்னே. பென் சியர்ஸ், மிட்செட் தலா 2 விக்கெட் கைப்பறினர்.
 
இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய  நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 102 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டும் இழந்தது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் ஸாம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜோஸ் ஹேசில்ட் டாட் கம்மின்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
 
எனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியது.