1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2023 (15:32 IST)

நல்ல தொடக்கத்துக்குப் பிறகு சரியும் ஆஸி… 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தற்போது 4 விக்கெட்களை இழந்து ஆஸி அணி 147 ரன்களோடு ஆடி வருகிறது.