வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (13:35 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி.. டாஸ் வென்ற இந்தியா எடுத்த அதிரடி முடிவு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குவதை அடுத்து முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று விளையாடும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களின் தகவல் இதோ:
 
இந்தியா: இஷான் கிஷான், சுப்மன் கில், கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தாக்குர், குல்தீப் யாதவ், சிராஜ் மற்றும் ஷமி
 
ஆஸ்திரேலியா: ஹெட், மார்ஷ், ஸ்மித், லாபுசாஞ்சே, இங்கிஸ்ட், க்ரீன், மாக்ஸ்வெல், ஸ்டோனிஸ், அபாட், ஸ்டார்க், ஜாம்பா
 
Edited by Siva