Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்… ஆல் அவுட் ஆன ஆஸி!

Written By vinoth
Updated: வியாழன், 2 மார்ச் 2023 (11:21 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய முதல் நாள் முடிவில் 156 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை முடித்தது.

இரண்டாம் நாளை இன்று தொடங்கிய ஆஸி. அணி முதலில் சில ஓவர்களை சிறப்பாக எதிர்கொண்டாலும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 197 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளனர்.

இன்று 40 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளது ஆஸி அணி.  முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 88 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

அடுத்த கட்டுரையில்
Show comments