வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2023 (15:41 IST)

AsianGames2023- ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி

afganisthan
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்   நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில், ஆடவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெ  போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆடவர் கிரிக்கெட்டின் 2 வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான் அணி,.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்ந்து  இந்தியா விளையாடவுள்ளது.