Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சி எஸ் கே அணியில் இணைகிறாரா அஸ்வின்… புதிய பொறுப்பு!

Written By vinoth
Updated: வியாழன், 6 ஜூன் 2024 (07:41 IST)
இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். அவர் அறிமுகமான தொடக்கத்தில் சில சீசன்களில்  சென்னை அணிக்காக ஆடி பிரபலமடைந்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் புதிதாக அமையவுள்ள செயல்திறன் மையத்துக்காக தலைமை பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அங்குதான் இனி சி எஸ் கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபாடுவார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுக்கான ஆலோசனைகளும் அஸ்வின் தலைமையில் வழங்கப்படும் என தெரிகிறது.

சி எஸ் கே அணியில் புதிய பொறுப்பை பெற்றுள்ளதால் அஸ்வின் மீண்டும் சி எஸ் கே அணியால் ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், “அஸ்வினை ஏலத்தில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தில் அன்றைய நிலைமையை பொறுத்தது அது. ஆனால் அவர் இப்போது சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாகியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்.. குவியும் வாழ்த்துக்கள்..

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

அடுத்த கட்டுரையில்
Show comments