திங்கள், 14 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (15:29 IST)

அரச குடும்பத்துக்கு வாரிசான அஜய் ஜடேஜா… சொத்தாக கிடைத்தது இத்தனை கோடியா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  அஜய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை, 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். தொடர்ந்து விளையாடி இருந்தால் இவர் இந்திய அணியின் கேப்டனாக கூட வந்திருப்பார். ஆனால் சூதாட்ட புகாரில் சிக்கியதால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் வர்னணையாளராகப் பணியாற்றி வரும் ஜடேஜா, ஆப்கானிஸ்தான் அணிக்குத் தற்காலிக பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.  இந்நிலையில் சமீபத்தில் இவர் ஜாம்நகர் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார்.

குஜராத்தின் ஜாம்நகர் மன்னர் ஷத்ரு சல்யா சிங்குக்கு வாரிசு இல்லாத சூழலில் தன்னுடைய உறவினரான அஜய் ஜடேஜாவை அரச குடும்பத்தின் வாரிசாக அறிவித்துள்ளார். இதன் மூலம் மன்னருக்கு சொந்தமான அரண்மனை உள்ளிட்ட பல்வேறு சொத்துகளின் மூலமாக ஜடேஜாவுக்கு 1100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து கிடைத்துள்ளது.