அமீரக அணியோடு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்ட ஒப்பந்தம்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கிரிக்கெட் அணிகளுக்கு மத்தியில் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்த அணியின் ரஷித் கான் உள்ளிட்ட வீரர்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெறுகின்றனர்.
இந்நிலையில் அரசியல் காரணங்களால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று மற்ற அணிகள் போட்டிகளில் விளையாட தயங்குகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் தங்கள் போட்டிகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இப்போது ஐக்கிய அரபுகள் அமீரக கிரிக்கெட் அணியோடு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இதற்கு பதிலாக அந்த நாட்டு மைதானங்களை தங்களின் ஹோம் கிரவுண்ட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.