1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (19:39 IST)

4 வது முறையாக 600 ரன்கள் – கே.எல். ராகுல் சாதனை !

KL Rahul
ஐபிஎல் தொடரில் 4வது முறையாக 600 ரன் களை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல்-15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. சூப்பர் லீக் சுற்று முடிந்து, பிளே ஆப் சுற்று  நடைபெற்று வருகிறது.


இந்த கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ ஜெயண்ட்ஸ் அணி, டூ பிளஸிஸ்தலைமையிலான பெங்களூர் ராயல்  சேலஞ்சர்ஸ் அணியுடம் மோதியது.

இப்போட்டியில், பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 14 ரன் கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இதில், கேப்டன் ராகுல் 79 ரன்கள் அடித்திருந்தார்.  அப்போது, அவர், இந்த சீசனில் 600 ரன் களை கடந்துள்ளார். இவர் 15 போட்டிகளில் விளையடிய அவர் மொத்தம் 616 ரன் கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் 659 ரன்களும், 2019ஆம் ஆண்டில் 593 ரன் களும், 2020 ஆம் ஆண்டில் 670 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.