திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌கி‌றி‌ஸ்ம‌ஸ்
Written By

மனிதனின் பாவம் போக்க வந்த இயேசு!

"இயேசு' என்பதற்கு "விடுதலையாக்குபவர்' என்றும் "கிறிஸ்து' என்பதற்கு "தீர்க்கதரிசி' என்றும் அர்த்தம். கிறிஸ்துவாக இயேசு  ஏன் உலகில் பிறந்தார் என்பதை ஆராய வேண்டும். 
கடவுள் முதல் மனிதனாக ஆதாமையும், அவனுக்கு துணையாக ஏவாளையும் படைத்தார். பின்பு இவர்கள் மூலம் மக்கள்  ஜனத்தொகை உலகில் பெருகத் துவங்கி, சேத், ஏனோஸ், கேனான், மகலாலேயல், யாரேத், ஏனோக், மெத்தூசலா, லாமேக்,  நோவா, சேம், அர்பக்சாத், சாலா, ஏபேர், பேலேகு, ரெகு, செருக், நாகோர், தேரா, ஆபிரகாம் வரை 20 தலைமுறைகள்  உருவாயின. 
 
2 ஆயிரம் ஆண்டுகளாக ஆதாமிலிருந்து துவங்கிய பாவம் உலகில் அதிகமானது. மனிதன் பாவ மன்னிப்பை பெற ஆட்டையும்,  மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்குச் செலுத்தி வந்தான். ஆனாலும், பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் மறுபடியும் பாவத்திற்கு அடிமையாகி வந்தான். மனிதனின் பாவம் போக்க வேண்டுமானால் தானே மனிதனாகப்  பிறந்து பாவப் பலியாக தானே இறக்க வேண்டும் என்று கடவுள் விருப்பம் கொண்டார்.