கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்குப்பின் உள்ள வாழ்வுக்கு சான்று

Jesus Christ
உண்மையில் மோட்சம் நரகம் என்னும் இடங்கள் இருக்கிறதா? வேதம் நமக்கு கூறிகிறதாவது மரணத்திற்குப்பின் வாழ்வு மட்டுமல்ல, தேவன் தம்மில் அன்பு கூறிகிறவர்களுக்கும் ஆயுத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது  கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று சொல்லத்தக்கதான மகிமையான ஒரு  நித்திய வாழ்வு இருக்கிறது. 
நமக்கு இந்த நித்திய வாழ்வை அளிக்க தேவனாக இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். அனைவரின் பாவங்களுக்கான  பரிகாரமாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப் பின் கல்லரையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை  மரணத்தை வென்றவராக நிரூபித்தார்.
 
கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலைக்கல் உயிர்த்தெழுதல் ஆகும். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதால், நாமும்  அவ்வாறே எழுப்பப்படுவோம் என்று விசுவாசம் கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்திற்குப்பின்  உண்டான வாழ்வுக்கு மிகப்பெரிய சான்றாகும். பெரிய அறுவடையாக மீண்டும் மரணத்திலிருந்து எழுப்பப்படப்போகும் அநேகரில் கிறிஸ்து முதலானவர் மட்டுமே. உடல்ரீதியான மரணம் ஆதாம் என்னும் ஒரு மனிதன் மூலமாக வந்தது. நாம் அனைவரும்  ஆதாமின் வழித்தோன்றல்களே. இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனுடய குடும்பத்தில்  சுவீகாரப்பிள்ளைகளாய் இணைக்கப்பட்ட அனைவருக்கும் புது வாழ்வு அளிக்கப்படும்.


இதில் மேலும் படிக்கவும் :