HBD பூஜா ஹெக்டே: பாலிவுட்டில் விரட்டியடிக்கப்பட்டு டோலிவுட்டில் ஜெயித்தது வரை!

Written By Papiksha Joseph
Updated: புதன், 13 அக்டோபர் 2021 (10:12 IST)
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். 
 
தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு சினிமாவுக்கு உண்மையாக உழைத்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி அதிகம் சம்பளம் வாங்கும் ஹிட் நடிகை  லிஸ்டில் இடம் பிடித்தார். துவ்வட ஜெகந்நாதம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தொடர்ந்து ரங்கஸ்தலம் , மஹரிஷி, ஆல வைகுந்தப்புராமுலு உள்ளிட்ட படங்கள் மார்க்கெட்டின் உச்சத்தில் அமர வைத்தது. 
 
இந்நிலையில் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் நல்ல டான்சர் என்பதால் விஜய்க்கு போட்டியாக பூஜா ஹெக்டேவும் பேசப்படுவார். எனவே தமிழின் ஹிட் நடிகையாக ஜொலிக்கப்போகும் பூஜா ஹெக்டேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 31வது பிறந்தநாள் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

விரைவில் போயஸ்கார்டனில் குடியேறும் நயன்தாரா!.. வீடு ரெடி!...

ரஜினியின் பட்டத்தை ஆட்டய போட்ட தனுஷ்!.. இதெல்லாம் தெரிஞ்சிதான் நடக்குதா!..

உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு தனுஷ் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: கஸ்தூரி ராஜா

ஜனநாயகன் படத்தில் சர்ச்சையான காட்சிகள்!.. இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு நோட்டீஸ்!..

எங்ககிட்ட கொள்ளையடிச்சி எங்களுக்கு கொடுக்காதீங்க!.. ஆர்.கே.செல்வமணி ஆவேசம்..

அடுத்த கட்டுரையில்
Show comments