புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (07:18 IST)

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஜா ஹெக்டே!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூஜா ஹெக்டே!
தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் நாயகிமான பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப் படத்தில் அறிமுகமானாலும் அதன் பின்னர் அவர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி, தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சாரியா, பிரபாஸ் நடத்தி வரும் ராதே ஷ்யாம், பாலிவுட்டில் ரன்வீர் கபூர் நடித்து வரும் சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு வெப்துனியா சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.