செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (15:08 IST)

ஒட்டுத்துணி இல்லாம மறுபடி போஸ் குடுங்க..! – ரன்வீர்சிங்கிற்கு ”பீட்டா” அழைப்பு!

Ranveer Singh
சமீபத்தில் நிர்வாண போட்டோஷூட் செய்த ரன்வீர்சிங் சர்ச்சைக்குள்ளான நிலையில் மறுபடியும் அவரை நிர்வாண போஸ் தரும்படி பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் ரன்வீர்சிங். நடிகை தீபிகா படுகோனின் கணவரான இவர் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்ததை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல விலங்குகள் நல அமைப்பான பீட்டா தங்களது விளம்பரத்தில் ஆடையின்றி நிர்வாணமாக போஸ் தருமாறு ரன்வீர்சிங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பீட்டாவின் இந்திய துணை தலைவர் சச்சின் பங்கோரா பேசுகையில் “ரன்வீர்சிங் எங்களுடைய இதழுக்கு சிறந்த பொருத்தமாக இருப்பார். மனிதர்களை போல விலங்குகளும் ரத்தம், சதை, எலும்புகளால் ஆனவை. மனிதர்களை போலவே அவற்றிற்கு தனித்துவமான குணங்கள் உண்டு. அவை சாக விரும்புவதில்லை” என்று கூறியுள்ளார்.