திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (22:59 IST)

கார்த்தியின்'' விருமன் ''பட டிரைலர் ரிலீஸ்...

viruman
கார்த்தி -அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுக்டன் கருணாஸ், சூரி, ராஎஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா – ஜோதிகா தயரித்துள்ள இப்படத்திற்கு,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,   வரும் 12 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த  நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற கஞ்சப் பூவு பாடல் ஹிட்டான  நிலையில், இன்று மதுர வீரன் என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோவை யுவன் வெளியிட்டுள்ளார். இப்பாடல் தனக்குப் பிடித்தமானது என நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், விருமன் படத்தின் டிரைலரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான 2 மணி நேரத்தில் சுமார் 1 மில்லியர் பார்வையாளர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.