செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (13:35 IST)

ரூ.50 கோடி பிளாட், BMW கார், Bike - அதியா ஷெட்டி, கே.எல்.ராகுல் ஜோடிக்கு கோடிக்கணக்கில் திருமண பரிசுகள்!

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை ஜனவரி 23ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டனர். இந்த ஜோடி பல கோடி மதிப்பில் திருமண பரிசுகள் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 
 
அதனபடி விராட் கோலி  ரூ. 2.17 கோடி மதிப்பிலான காரை பரிசளித்தார். அதேபோல்  மகேந்திர சிங் தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். 
 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசளித்தார்.  நடிகர் ஜாக்கி ஷெராப் 30 லட்ச மதிப்பிலான சொகுசு வாட்சை பரிசாக அளித்தார். 
 
திருமணத்தில் இந்த ஜோடி பல கோடி பரிசு பொருட்களை அள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.