கே.எல்.ராகுல் திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்கள்.. ரூ.100 கோடி மதிப்பா?
கே.எல்.ராகுல் திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்கள்.. ரூ.100 கோடி மதிப்பா?
பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் நடிகை அதியா ஷெட்டியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு ரூபாய் 100 கோடி மதிப்புள்ள பரிசு பொருள்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணமகள் அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டி ஐம்பதுகோடி மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். அதேபோல் நடிகர் சல்மான் கான் 1.6 கோடி மதிப்புள்ள ஆடி கார், விராத் கோலி ரூபாய் 2.17 மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் பரிசாக அளித்துள்ளனர்
மேலும் மகேந்திர சிங் தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள பைக் பரிசாக அளித்துள்ளார். நடிகர் ஜாக்கிசரப் 30 லட்சம் மதிப்புள்ள வாட்ச், நடிகர் அர்ஜுன் கபூர் ஒன்றரை கோடி மதிப்புள்ள வளையல்களை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் கே எல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு ரூபாய் 100 கோடி மதிப்புள்ள பரிசுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva