1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (10:24 IST)

ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்திருக்கிறது: டிரம்ப் கொந்தளிப்பு!

சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. 
 
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்த நிகழ்வு அமெரிக்காவுக்கு ஒரு தெளிவான விவரத்தை சொல்லும் என நம்புவதாகவும் ஐஆர்ஜிசி கமாண்டர் மஜ்-ஜென் ஹுசைன் சலாமி கூறியதாக இரான் நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.
 
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இரான் மிகப்பெரிய தவறை இழைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
 
எனினும், இதுமனித தவறுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறிய அதிபர், இரான் வேண்டுமென்றே செய்திருக்கும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று தெரிவித்தார்.
 
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் இரானின் வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இரான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.
 
அமெரிக்காவுக்கும், இரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு பதற்றத்தை அதிகரித்துள்ளது.