அமெரிக்காவின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!

america
Last Updated: புதன், 29 மே 2019 (16:58 IST)
உலக நாடுகளுக்கெல்லாம் மூத்த அண்ணனாகவும், நாட்டாமையாகவும் உள்ளது ஆகப்பெரிய வல்லரசான அமெரிக்கா.சமீபத்தில் இந்தியா மற்றும் சில நாடுகளை இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டது. 
அதுபோக ஈரானில் வளைகுடா எல்லைப்பகுதில் எந்நேரமும் இரு நீர்முழ்கிப் போர்க்கப்பல்களை நிறுத்திவைத்துள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற அபாயம் உஅலக நாடுகளில் அச்சம் சூழ்ந்திருக்க , இரான் தேசமோ அமெரிக்க போர்க்கப்பல்கலை மூழ்கடித்துவிடுவோம் என்று படுகூலாக அமெரிக்காவையே மிரட்டிவருவது வேடிக்கைதான்.
 
இந்நிலையில் தற்போது அமெரிக்க கரன்சி கண்கானிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அதாவது அந்நியச் செலாவணிக்கொள்கைகளை உடைய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் வைக்கப்படுவது மரபு. 
 
இதனடிப்படையில் ஜெர்மனி, சீனா , ஜப்பான்,தென்கொரியா,சுவிட்டர்லாந்து, ஆகிய முக்கிய நாடுகளுடன் இந்தியாவும் கடந்த ஆண்டு இப்பட்டியலில் இணைந்தது.
 
இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறையாண்டு அறிக்கையில் அடிப்படையில் இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கரன்சிகள் இக்கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :