ஓமனில் எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் – ஈரான் மேல் குற்றம் சுமத்தும் அமெரிக்கா

ship burn
Last Modified வெள்ளி, 14 ஜூன் 2019 (18:03 IST)
ஓமனில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்குமான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவுக்கு ஆதரவான அரபு நாடுகள் மீது ஹவுதி புரட்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த ஹவுதி புரட்சியாளர்களுக்கு ஈரான்தான் மறைமுகமாக உதவி வருகிறது என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைத்தது அமெரிக்கா. இதற்கிடையே ஈரான் சென்ற ஜப்பானிய பிரதமரிடம் “ட்ரம்புகிட்ட மனுசன் பேசுவானா?” என நேரடியாகவே கலாய்த்திருக்கிறார் ஈரான் மதகுரு ஒருவர்.

இந்நிலையில் நேற்று நார்வே மற்றும் ஜப்பானுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் செல்லும்போது தாக்கப்பட்டன. முழுவதும் பற்றி எரிந்த கப்பலில் இருந்து அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சவுதி அரேபியாவுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் கப்பல்கள் அவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான்தான் நீர்முழ்கி குண்டுகள் மூலம் இந்த கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் ஈரான் ராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகாத குண்டுகளை அகற்றுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், எங்கள் மேல் சுமத்தப்படும் குற்றங்கள் ஆதாராமற்றவை எனவும் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :