செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (13:41 IST)

வட கொரியா vs தென் கொரியா: மீண்டும் மோதல் தொடங்குகிறதா?

வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையினான ஹாட்லைன் வசதி உட்பட தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.
 
தென் கொரியாவை எதிரி என வர்ணித்துள்ள வட கொரியா ,அந்த நாட்டுக்கு ஏதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இது என தெரிவித்துள்ளது.
 
வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் வட கொரிய அரசு நிறுத்தியுள்ளது.
 
வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்து துண்டு பிரசுரங்கள் அனுப்புவதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால்,அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் கடந்த வாரம் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் வட கொரியாவின் இந்த அறிவிப்பு, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலக அளவில் கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.