1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (08:40 IST)

திருச்சியில் தீர்ந்து போன பிசிஆர் கருவிகள்! உடனே இறக்குமதி செய்த தமிழகம்!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்கான பரிசோதனைகளுக்காக 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள பிசிஆர் சோதனையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடையே சீனாவிடமிருந்து ரேபிட் கிட்கள் வாங்கப்பட்டன, ஆனால் அவை கொரோனாவை உறுதிபடுத்துவதில் தவறான முடிவுகளை காட்டியதை தொடர்ந்து அவை திரும்ப சீனாவுக்கே அனுப்பப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி பிசிஆர் சோதனையையே தமிழக அரசு முழுமையாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தென்கொரிய நிறுவனத்திடம் வாங்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிசிஆர் கருவிகள் தீர்ந்துவிட்டதால் கொரோனா பரிசோதனையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. மே 17 அன்றே 1 லட்சம் பிசிஆர் கருவிகள் முன்னதாக தமிழகம் வந்தடைந்தன. இவற்றை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவிற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.