1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (15:44 IST)

தொகுதிக்கு பணம் தராததால் பெண் எம்.பியை அறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

கென்யாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது தொகுதிக்கு பணம் ஒதுக்காததால் சக பெண் எம்.பியை அறைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ரஷித் காசிம் என்ற அந்த எம்.பி, தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள பட்ஜெட் கமிட்டியை சேர்ந்த ஃபதுமா கெடியை அறைந்ததாக கூறப்படுகிறது. கெடி, வாயில் ரத்தத்துடன் அழுவது போன்ற புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
 
வட கிழக்கு கென்யாவில் உள்ள வாஜிர் கிழக்கு பகுதியின் எம்.பியான காசிம், நாடாளுமன்ற கார் நிறுத்தத்தில் வைத்து கெடியுடன் தனது தகுதிக்கு பணம் தராதது குறித்து சண்டையிட்டு பின் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை ஆண் எம்.பிக்கள் கேலி செய்ததால் அவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் பெண்கள் ஒழுங்காக நடந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், ஆண்களை எவ்வாறு நடத்துவது என பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஆண் எம்பிக்கள் தெரிவித்ததாக தெரிகிறது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக காசிம் கைது செய்யப்பட வேண்டும் என்று போராடிய பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர். பின்னர் காசிம் கைது செய்யப்பட்டார்.
"நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை." என ஷெக் தெரிவித்தார்.