ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (15:27 IST)

ப்ளீஸ் நயந்தாராவுக்கு மாமாவாக வாய்ப்பு கொடுங்கள்! முருகதாஸிடம் கெஞ்சிய பிரபல ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தர்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். 


 
தமிழ் சினிமாவின் திறமைவாய்ந்த இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உடன் யோகி பாபு, ஸ்ரீமன், நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 
 
ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் ‘தர்பார்’ படத்தில் தனக்கு இந்த வாய்ப்பு கொடுக்குமாறு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுடன் ஹாலிவுட் நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார்.   


 
அதில், “முருகதாஸ். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னால் ரஜினிகாந்தின் அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் மாமாவாகவோ இருக்க முடியும். எல்லோரும் என்னால் நடிக்க முடியும் என்று சொல்கிறார்கள். ஸ்ரீகர் பிரசாத்தும், சந்தோஷ் சிவனும் நான் நடித்த காட்சிகளை நன்றாக எடிட் செய்ய முடியும். ஏன் இசையமைப்பாளர் அனிருத் கூட உலகம் முழுவதும் இருக்கும் நட்சத்திர நடிகர்களை வைத்து ஒரு ஹிட் பாடல் கொடுக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று ஏ.ஆர்.முருகதாஸை கோரிக்கை வைத்து ட்வீட் செய்துள்ளார்.


 
ஹாலிவுட் நடிகரான பில் டுயூக் இதுவரை பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரிடேட்டர், எக்ஸ் மேன் போன்ற மாபெரும் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். பில் டுயூக்கின் இந்த கோரிக்கையை கண்ட இயக்குனர் முருகதாஸ் மிகவும் ஆச்சர்யப்படத்துடன் ‘இது நீங்கள் தானா’ என்று ரீட்விட் செய்துள்ளார். 
 
ஹாலிவுட் பிரபலம்,  இயக்குனர்  முருகதாஸிடம் வாய்ப்பு கேட்டு இப்படி ஒரு ட்வீட் செய்துள்ளது. தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும், பில் டுயூக்கே  தான் இதை பதிவிட்டாரா என்பது கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. தற்போது அந்த டீவீட்டை செய்தது தனது குழு தான் என்று பில் டுயூக் உறுதிப்படுத்தியுள்ளார்.