வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (15:25 IST)

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் ! சிறுமிக்கு பிறந்த ஆண்குழந்தை ...பகீர் சம்பவம்

தமிழகத்தின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிற்ந்துள்ளது. சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி  எமாற்றி கர்ப்பமாக்கிய ஒடிஷா இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது பெற்றோர் ஒரு பனியல் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது தனியாக இருந்த சிறுமியுடன் பழகி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அஜித் கிரஷல் (26) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவானார்.
 
அதன் பிறகு சிறுமிக்கு வயிற்றில் வலி உண்டாகியுள்ளது. பின்னர் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஒடிஷாவைச் சேர்ந்த அஜித் கிரஷல் மீது போலீஸ் புகார் தெரிவித்தனர்.
 
தற்போது போலிஸார் அஜித் கிரஷலை தேடிவருகின்றனர். 13 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ள செய்தி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.