வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (14:11 IST)

மராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா?

ராம் புன்னியாணி 
 
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் நினைவில் நிற்கும் மிகப் பிரபலமான மன்னர் சிவாஜி. மும்பையின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு சிவாஜி பெயர் சூட்டப்பட்டிருப்பது மட்டுமல்ல, அரபிக் கடலில் அவரது பிரம்மாண்டமான சிலை ஒன்றை நிறுவவும் திட்டம் உள்ளது.
இரண்டு அரசியல் போக்குகள் சிவாஜியை வெவ்வேறு வழிகளில் நினைவுகூறுகின்றன. சிலர் அவரை பிராமணர்களையும், பசுக்களையும் காத்தவராகவும், வேறு சிலர் அவரை மக்கள் நலன் பேணிய மன்னராகவும் பார்க்கின்றனர்.
 
அதே நேரத்தில் அவரை முஸ்லிம் விரோதியாகக் கட்டமைக்கும் ஆழமான கருத்தோட்டம் ஒன்றும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விநாயகர் சதுர்த்தியின்போது மும்பையில் அமைக்கப்பட்ட ஒரு அலங்கார வளைவில் மிராஜ்-சங்லி யுகத்தைச் சேர்ந்த அஃப்சல்கானை சிவாஜி வெட்டுவதைப் போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
 
இந்தக் காட்சி அடங்கிய துண்டறிக்கை மகாராஷ்டிரா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இந்த வளைவு இருந்த பகுதியில் இதையொட்டி வகுப்பு மோதலும் நடந்தது. சிவாஜி என்ற இந்து மன்னர் அஃப்சல்கான் என்ற முஸ்லிம் மன்னரை கொன்றதாகவே பார்வை இருந்தது.
 
பிரதப்காவில் உள்ள அஃப்சல் கானின் கல்லறையை இடிப்பதற்கான நடவடிக்கைகளும் இந்து வலதுசாரி செயல்பாட்டாளர்களால் எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த கல்லறை, சிவாஜியால் உருவாக்கப்பட்டது என்ற தகவல் வெளியான பிறகே, இந்த செயல் நிறுத்தப்பட்டது.
 
சிவாஜி, அனைத்து மதங்களையும் மதித்த மன்னர். இது அவரின் அனைத்து கொள்கைகளிலும் பிரதிபலித்ததோடு, அவரின் நிர்வாகம் மற்றும் ராணுவம் அதற்கு ஒரு ஒருங்கிணைந்த சான்றாக இருந்தது.
 
மன்னர் சிவாஜியின் தாத்தாவான மலோஜிராவோ போஷ்லே குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு உள்ளது. அவர், சுஃபி சன்யாசியான ஷா ஷரிஃபை கவுரவிக்கும் விதமாக, தனது இரு மகன்களுக்கும் ஷாஜி மற்றும் ஷரிஃப்ஜி என்று பெயரிட்டார்.
 
உள்ளூர் இந்து மன்னர்களுடன் சண்டையிட்ட சிவாஜி, ஔரங்கசிப்பையும் எதிர்த்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஔரங்கசிப்பின் ராணுவத்தை முன்னின்று வழிநடத்தியவர், ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ராஜா ஜெய்சிங் என்பவர். இவர், ஔரங்கசிப்பின் அமைச்சரவையில் பெரும்பதவி வகித்தார்.
 
மனிதாபிமான அடிப்படையிலான கொள்கைகளை நிர்வாகத்திற்காக அவர் எடுத்துக்கொண்டார். அவை எந்த மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. அவரின் ராணுவத்திற்கு, கடற்படைக்கும் ஆட்களை சேர்க்கும் போதும், அதில் மதம் ஒரு பகுதியாக இருக்கவில்லை. அவரின் ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாமியர்களாக இருந்தனர்.
 
சிவாஜியின் கடற்படையின் தலைமை தளபதியாக இருந்தவர் சித்தி சம்பால். அவரின் கடற்படையில், இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.
 
உலக வரலாற்றில் பெரிய பணக்காரராக இருந்த முஸ்லிம் மன்னர்
 
ஆக்ரா கோட்டையில் அவர் கைது செய்யப்பட்டபோது கூட, அவரின் தப்பிக்கும் திட்டத்திற்கு உதவுவோராக அவர் மனதார நம்பியவர்களில் ஒருவர் இஸ்லாமியர். அவரின் பெயர் மதாரி மெஹ்தர்.
 
சிவாஜியின் மிக முக்கிய விவகாரங்களுக்கான உதவியாளாராக இருந்தவர், மௌலானா ஹைதர் அலி. அவரின், பீரங்கிப்படையின் தலைவராக இருந்தவர் இப்ராஹிம் கார்டி.
 
பிற மதங்களின் மீது அவருக்கு இருந்த மரியாதை தெளிவாக இருந்தது. `ஹஸ்ரத் பாபா யகுப் பஹுத் தோர்வாலே` போன்ற துறவிகளை அவர் மிகவும் மதித்தார். அவருக்கு வாழ்நாளுக்கான உதவித்தொகையை வழங்கினார். இதேபோல, குஜராத்தில் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தின் பாதிரியார் அம்ரூஸிற்கு அவர் உதவினார்.
 
தனது தினசரி பிராத்தனைக்காக ஜகதீஷ்வர் கோவிலை கட்டியதுபோலவே, இஸ்லாமியர்களுக்காக தனது அரண்மனைக்கு எதிரே ஒரு மசூதியையும் அவர் திலைநகர் ரைகாத்தில் கட்டினார்.
 
இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும் தவறாக நடத்தப்படக்கூடாது என தனது ராணுவத்தினருக்கு மிகவும் கண்டிப்பான கட்டளைகளை விதித்திருந்தார் சிவாஜி.
 
தர்கா மற்றும் மசூதிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது. தனது படையினரின் கைகளில் எப்போது குரான் கிடைத்தாலும், அதை முறையாக ஒரு இஸ்லாமியரிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருந்தார்.
 
பசீன் பகுதியில் நவாபின் மருமகளின் முன்பு, அவர் தலைகுணிந்து மரியாதை செய்த கதை பலரும் அறிந்ததே. திருடிய பொருட்களில் ஒரு பகுதியாக அவரும் மன்னரின் முன்பு கொண்டுவரப்பட்ட போது, அவரிடம் மரியாதையான முறையில் மன்னிப்பு கோரிய மன்னர் சிவாஜி, மீண்டும் அவரை இல்லத்தில் சென்று சேர்க்குமாறு தனது வீரர்களின் கூறினார்.
 
அஃப்சல் கானை கொன்ற சம்பவத்திலிருந்து பல விஷயங்கள் கொண்டுவரப்பட்டன.
 
அந்த காலத்தில், மன்னர் சிவாஜியுடன் பல ஆண்டுகளாக சண்டையிலிருந்த அதில்ஷாஹியின் பிரதிநிதியாக இருந்தவர் அஃப்சல்கான்.
 
சிவாஜியை தனது கூடாரத்திற்கு அழைத்து, அவரை கொல்வதற்காக அஃப்சல்கான் திட்டமிட்டது குறித்து, ருஸ்தாமே ஜமன் என்ற இஸ்லாமியர் மூலமான சிவாஜி தெரிந்துகொண்டார். சிவாஜியிடம் இரும்பு நகங்களை தன்னுடன் கொண்டுவருமாறு அந்த இஸ்லாமியர் அறிவுரை கூறினார்.
 
அஃப்சல்கானிற்கு ஆலோசகராக கிருஷ்ணஜி பாஸ்கர் குல்கரி என்பவர் இருந்தார் என்பதை மக்கள் மறந்துவிட்டனர். அவர் சிவாஜிக்கு எதிராக வாள் ஏந்தினார்.
 
மன்னர்களுக்கு இடையே பதவிக்காக இருந்த சண்டைகள், பிரிட்டானியர்களின் மத ரீதியிலான வரலாற்று எழுத்தாண்மையால், மதப்பிரச்சனை என்ற திருப்புமுனையை சந்தித்தது.
 
`சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்` என்ற பார்வை அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன. இந்த பார்வையிலிருந்து பிரச்சனையை பேசும் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. `ஜான்தா ராஜா ( எல்லாம் தெரிந்த ராஜா)` என்ற நாடகத்தை புரந்தரா என்பவர் எழுதியிருந்தார், அது, மஹாராஷ்டிரா முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. அந்த நாடகம், சிவாஜியை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக காட்டுகிறது.
 
`மராத்தியர்களின் புதிய சரித்திரம்` என்ற புத்தகத்தில் மிக பொருத்தமாக எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் சர்தேசி, `சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ, அந்த மதத்திற்கு எதிராகவோ ஒருபோதும் நடந்ததில்லை.` இவை எல்லாமே, மதங்களுக்கு இடையிலான நல்லுறவை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை காட்டும்.
 
அவரின் அடிப்படையான இலக்கு என்பது, முடிந்த அளவு பெரிய நிலப்பரப்பில் தனது ராஜியத்தை நிறுவவேண்டும் என்பதே. அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவராக சித்தரிப்பது என்பது உண்மைக்கு புறம்பானது.