மகாராஷ்டிரா அமைச்சரவை: யார் யாருக்கு எந்தெந்த துறை?
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியேற்ற நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கருடன் அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே: பொதுநிர்வாகம், சட்டம் மற்றும் நீதி
துணை முதலமைச்சர் அஜித் பவார்: நிதித்துறை
அனில் தேஷ்முக்: உள்துறை
ஏக்நாத் ஷிண்டே: நகர்ப்புற வளர்ச்சி
ஆதித்யா தாக்கரே: சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை
பாலாசாகேப் தோரட்: வருவாய்த்துறை
அசோக் சவான்: பொதுப்பணித்துறை
ஜிதேந்திரா ஆவத்: வீட்டு வசதி
ராஜேஷ் டோ: சுகாதாரத்துறை
வர்ஷா கெய்க்வாட்: கல்வித்துறை
சுபாஷ் தேசாய்: தொழில்துறை
மேற்கண்ட துறை உள்பட மொத்தம் 28 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் ஒருசில நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அந்தந்த துறையின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது