வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (14:54 IST)

பிரான்ஸ் துப்பாக்கி சூடு: போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொலை

பிரான்சில் மூன்று போலீஸ் அதிகாரிகளை ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொன்றார்.

பிரான்சின் மத்தியப் பகுதியில் ஒரு குடும்ப வன்முறை சம்பவத்துக்காக அந்த போலீஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
 
புதன்கிழமை அதிகாலை செயின்ட்-ஜஸ்ட் என்ற கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு பெண் வீட்டின் கூரைக்கு தப்பிச் சென்றார்.
 
துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உடனடியாக இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பிறகு அந்த துப்பாக்கிதாரி வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு மேலும் அங்கு வந்த வேறு இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் கொன்றார்.
 
கூரை மீது ஏறிய பெண் மீட்கப்பட்டார்.
 
48 வயதான அந்த சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தைகளை அடைத்துவைத்த ஒரு விவகாரத்தில் அவரை அதிகாரிகளுக்குத் தெரியும் என்று  கூறப்படுகிறது.
 
அந்த வீடு எரிந்துவிட்டதாகவும், சந்தேக நபர் உள்ளே இருக்கிறாரா தப்பிவிட்டாரா என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்துவருவதாகவும் செயின்ட்-ஜஸ்ட் மேயர் ஃபிரான்சே சௌடார்ட் லீ ஃபிகாரோ ஊடகத்திடம் தெரிவித்தார். ஆனால், இன்னொரு ஊடகத்திடம் பேசிய போலீஸ் அதிகாரிகள் அவர் தப்பிவிட்டதாகத்  தெரிவித்துள்ளனர்.