1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (19:31 IST)

விஜய் மல்லையாவின் ரூ.14 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

இந்திய வங்கிகளில் ரூபாய் 11,000 கோடி கடன் வாங்கி அந்த கடனை திருப்பி கொடுக்காமல் திடீரென இந்தியாவை விட்டு வெளியேறியவர் தொழில் அதிபர் விஜய் மல்லையா என்பது தெரிந்ததே 
 
தற்போது பிரிட்டனில் இருக்கும் அவரை சட்டரீதியாக இந்தியாவுக்கு வரவழைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் தற்போது தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முழக்கம் செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடன் விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விஜய் மல்லையாவுக்கு பிரான்சிலுள்ள ரூபாய் 14 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆனால் 11,000 கோடி தர வேண்டிய விஜய் மல்லையாவின் சொத்துக்களில் இருந்து 14 கோடி சொத்துக்கள் மட்டுமே பறிமுதல் செய்து இருப்பது சரியான நடவடிக்கையா? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்