Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோகரன்சி பணப்பரிமாற்றம்: திருடிய பணத்தை திருப்பி கொடுத்த ஹேக்கர்

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 23 ஏப்ரல் 2020 (14:12 IST)
டிஃபோர்ஸ் எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்தில் திருடப்பட்ட பணம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது. 
 
கிரிப்டோகரன்சிகளாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் இணையதளம் ஒன்றில் இருந்து சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை இணையவழியில் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
 
திருடப்பட்ட பணம் பெருமளவில் திரும்ப டிஃபோர்ஸ் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டாலும், திருடப்பட்ட வகை கிரிப்டோகரன்சிகளாக அல்லாமல் வெவ்வேறு வகை கிரிப்டோ கரன்சிகள் மூலம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
 
சீனாவிலிருந்து இயங்கும் டிஃபோர்ஸ் எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்தில் திருடப்பட்ட பணம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது. பணத்தை திருடியவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதால் அவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் மிண்டோ யாங் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

விஜய் கர்நாடகம் வருகிறார்.. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய முதல்வர் டிகே சிவகுமார்

இப்படியா ஒரு செய்திக்கு டைட்டில் போடுவது.. நியூயார்க் டைம்ஸ் ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்...

மக்களிடம் உள்ள 30000 டன் தங்கத்தை கேட்கிறதா மத்திய அரசு? உண்மை என்ன?

ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி பதுக்கிய எலி!... கர்நாடகாவில் சுவாரஸ்யம்!..

வேலை செய்யலனா சம்பளம் இல்ல!.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments