திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

மூன்றாவது அலை எப்போது வரும் என்று கூற முடியாது: வி.கே.பால்

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்தத் தேதியில் வரும் என்று கூறுவது சரியாக இருக்காது என்று இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்  குழுவின் தலைவர் வி.கே. பால் கூறியுள்ளார்.

புதிதாகப் பரவி வரும் டெல்டா பிளஸ் திரிபு மிக வேகமாகப் பரவும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
டெல்டா வைரஸ் காரணமாக தடுப்பூசிகளின் ஆற்றல் குறையும் என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை என்றும் வி.கே.பால் கூறியுள்ளார்.
 
டெல்டா பிளஸ் திரிபு புதிது என்பதால் அது தொடர்பான ஆய்வுத் தகவல்கள் நமக்கு மிகக் குறைவாகவே இருக்கிறது என்றும் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் இரண்டாவது அலையின் வீரியம் சற்று குறைந்திருக்கும் நிலையில் நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் வரை தொற்று கண்டறியப்படுகிறது.