திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Prasanth K

அக்டோபர் மாத ராசிபலன்கள் 2025! – மிதுனம்!

Mithunam
அக்டோபர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:
08.10.2025 அன்று  ராசியில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
10.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
17.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
27.10.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
இந்த மாதம் ராசிக்கு 5ல் சஞ்சரிக்கும் ராசியாதிபதி புதன் மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி தருவார். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள்  அலைய வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. 

திருவாதிரை:
இந்த மாதம் பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும். வெளிநாடு சம்பந்தமான பணிகளுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக  பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்:     அக்டோ 02, 03, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 10, 11, 12