ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala

மே மாத ஜோதிட பலன்கள் 2021: துலாம்

கிரகநிலை: தன ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு (அதி. சா) - களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் புதன், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
எந்த ஒரு சூழ்நிலையிலும் அனைவரையும் சரி சமமாக நடத்தும் துலா ராசியினரே  இந்த மாதம் கோபம் மறைந்து நிதானம் அதிகரிக்கும். எடுத்த முயற்சிகள்  அனைத்தும் வெற்றி பெறும். 
 
குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது  நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும். 
 
பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள  வேண்டியிருக்கும். 
 
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி  படிப்பது நல்லது.
 
சித்திரை:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். மனக்கவலை நீங்கும். எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல  சிந்தனை உண்டாகும். அறிவுதிறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோதைரியம் அதிகரிக்கும்.
 
ஸ்வாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள்  நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. 
 
விசாகம்:
இந்த மாதம் சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது  உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் பெருமாள் கோவிலில் தாயாருக்கு தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7.