1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala

மே மாத ஜோதிட பலன்கள் 2021: கடகம்

கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண் ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு (அதி. சா) - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் புதன், ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் கடக ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.
 
பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை  தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள்.
 
கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து  விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். 
 
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும்.
 
பூசம்:
இந்த மாதம் நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி  வாய்ப்புகள் வந்து சேரும்.
 
ஆயில்யம்:
இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.
 
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி  உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்; 
சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27.