செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala

மே மாத ஜோதிட பலன்கள் 2021: மிதுனம்

கிரகநிலை: ராசியில் செவ்வாய் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு  (அதி. சா) - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைபிடிக்கும் மிதுன ராசியினரே இந்த மாதம் அதிக முயற்சிக்கு எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
 
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
 
அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள்  திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம்  வாங்குவீர்கள். 
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
 
மிருகசீர்ஷம்:
இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம்  உண்டாகும்.
 
திருவாதிரை:
இந்த மாதம் பின்தங்கிய  நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு  அதிகரித்து மிளிரும்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை  கிடைக்கும்.
 
பரிகாரம்: புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25.