செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sasikala

மே மாத ஜோதிட பலன்கள் 2021: ரிஷபம்

கிரகநிலை: ராசியில் புதன், ராஹூ - தன ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி -  தொழில் ஸ்தானத்தில் குரு (அதி. சா) - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரக நிலவரம் உள்ளது.

பலன்:
 
கொடுத்த வாக்கை உயிருக்கு மேல் மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம்  பணவரத்து திருப்தி தரும். அதே வேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். 
 
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும்.  பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.
 
பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக  எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து  சேரும்.  
 
அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன்  கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
 
கார்த்திகை:
இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.
 
ரோகினி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை  உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில  பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
 
மிருகசீர்ஷம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
 
பரிகாரம்: தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23.