வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (17:31 IST)

68வது மாடியில் சாகசம் செய்த இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு: ஹாங்காங்கில் அதிர்ச்சி சம்பவம்..!

68வது மாடியில் சாகசம் செய்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஹாங்காங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
30 வயதான ரெமி லுசிடி என்பவர் 68 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் ஏறி சாகசம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்தார். 
 
அவர் 68வது மாடியை அடைந்தபோது அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை தட்டி பணிப்பெண்ணின் உதவியை கூறியுள்ளார். ஆனால் அந்த பணிப்பெண் அச்சத்தில் உதவ மறுத்ததாகவும் உடனடியாக அவர் காவல்துறையை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் காவல்துறையினர் வருவதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Siva