1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. youth died after drinked coco cola in china

வெயில் தாக்கத்தை போக்க கோகோ கோலா குடித்த வாலிபர் மரணம்!.. சீனாவில் சோகம்...

china man
வெயில் தாக்கத்தை போக்குவதற்காக குளிர்பானத்தை குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வெயிலில் வெப்பத்தை தணிக்க வெறும் 10 நிமிடங்களில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை குடித்ததல் 22 வயது இளைஞர் உயிரிழந்திருக்கிறார். ஒரே நேரத்தில் அதிக அளவு குளிர் பணத்தை குடித்ததால் வயிற்றில் கடுமையான வாயு மற்றும் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் குடல் மற்றும் ரத்த நாளங்களில் அதிகப்படியான வாயு சேர்ந்து உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் தடைப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே அவர் மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர் 18 மணி நேர தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார். பாக்டீரியா தாக்கமும் அவரின் மரணத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வட கொரியா மட்டும் அணு ஆயுதம் வச்சிக்கலாமா?!.. டொனால்ட் டிரம்ப் ரியாக்‌ஷன் இதுதான்...