புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (09:09 IST)

மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை: யார் யாருக்கு தெரியுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் செலவு கணக்கை காட்டாதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக காங்கிரஸ் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உடனடியாக தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்காதவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது