வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:09 IST)

குரங்குக்கு பாலியல் தொல்லை: வசமாய் சிக்கிய இளம்பெண்

குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  
 
எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வந்த பஸ்மா என்ற 25 வயது பெண் கடையில் இருந்த குரங்குடன் விளையாடி உள்ளார். 
 
அப்போது குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவிட்டுள்ளார். சுமார் 90 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் கசிந்தது. 
 
இதனால், போலீஸார் குரங்கிற்கு பாலியல் கொடுத்ததாக அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த குற்றத்தை அந்த பெண் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.